சூசையப்பர் சர்ச் தேர்பவனி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி அருகே வெளியக்கோட்டை சூசையப்பர் சர்ச் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு தேர் பவனி விழா நடைபெற்றது.ஏ.ஆர்.மங்களம் பங்கு பாதிரியார் அன்பரசு தலைமையில் சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பர் வீதி உலா வந்தார்.தேரில் வீதி உலா வந்த சூசையப்பரை தெருக்களில் பெண்கள் மாக்கோலம் இட்டு வரவேற்று வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.