மேலும் செய்திகள்
வழக்கறிஞர் பிறந்த நாள் விழா
26-Mar-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்பதியேற்றனர்.ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்த்திற்கு தேர்தல் அலுவலர் சலீம் தலைமையில் தேர்தல் நடந்தது.இதில் புதிய நிர்வாகிகளாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக அன்புசெழியன் போட்டியின்றி தேர்வு பெற்றார். செயலாளராக முத்து துரைசாமி, பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவராக பாபு, இணை செயலாளராக சந்திரலேகா ஆகியோர் தேர்வு பெற்றனர்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடந்தது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புசெழியனிடம் பொறுப்புக்களை முன்னாள் தலைவர் ேஷக் இப்ராஹிம் ஒப்படைத்தார்.புதிய நிர்வாகிகளை பாராட்டி மூத்த வழக்கறிஞர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, நாகராஜன், சித்திக்ரகுமான், முன்னாள் தலைவர் ேஷக் இப்ராஹிம், மாவட்ட அரசு வழக்கறிஞர் முனியசாமி உட்பட பலர் பாராட்டி பேசினர்.
26-Mar-2025