உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  செய்யது அம்மாள்  அறக்கட்டளை தலைவருக்கு தமிழக  அரசு விருது 

 செய்யது அம்மாள்  அறக்கட்டளை தலைவருக்கு தமிழக  அரசு விருது 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் இயற்கை ஆர்வலரான டாக்டர் பாபு அப்துல்லாவுக்கு தமிழக அரசு பசுமை விருது வழங்கி உள்ளது.செய்யது அம்மாள் அறக்கட்டளைத்தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா செய்யது அம்மாள் பசுமைபடை என்ற அமைப்பினை ஏற்படுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாதபுரத்தில் நகர், சுற்றுவட்டார பகுதியில், நெடுஞ்சாலை ஒரங்களில் ஏராளமான மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.ராமநாதபுரத்தில் நீர் நிலைகளை துார் வாரும் பணிகளையும் செய்துள்ளார். இதற்காக தமிழக அரசு நீர் நிலை பாதுகாவலர் என்ற விருதினையும், ரொக்கபரிசும் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.விருதுடன் டாக்டர் பாபு அப்துல்லா ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை