உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ் பேச்சு போட்டி

தமிழ் பேச்சு போட்டி

ராமநாதபுரம்; ராமநாதபுரம் புஹாரியா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் எஸ்.எம்.பாருக் நினைவு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சு போட்டி நடந்தது.மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். டிரஸ்டிகள் சீனி முகமது மரைக்காயர், அப்துல்லா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்கள். அரசு மகளிர் கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் கனகவல்லி, செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் ராமநாதன்,சேதுபதி அரசு கலைக் கல்லுாரி உதவி பேராசிரியர் கவிஞர் முருகவேல் பங்கேற்றனர். பள்ளி மேலாளர் அபுதாஹிர், முதல்வர் அந்தோணி ராஜ், துணை முதல்வர் உமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ