உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தொழில் நுட்ப கருத்தரங்கு

 தொழில் நுட்ப கருத்தரங்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கு நடந்தது. முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். 3ம் ஆண்டு மாணவர் சாய் அரவிந்த் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் ஓசூர் ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன் பேசுகையில், எந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை ஒன்றாக இயந்திரவியல் துறை கருதப்படுகிறது. எதில் ஆர்வம் உள்ளதோ அத்துறையை தேர்வு செய்து கடின உழைப்பு, நேர்மை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார். பேராசிரியர்கள் தர்மபிரபாகரன், செந்தில்குமார், மாணவர்கள் பங்கேற்றனர். 4ம் ஆண்டு மாணவர் முகமது அப்துல் ஹமீது நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை