உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உளுந்து சாகுபடி குறித்து தொழில் நுட்ப பயிற்சி

உளுந்து சாகுபடி குறித்து தொழில் நுட்ப பயிற்சி

கமுதி: கமுதி அருகே கோட்டைமேட்டில் உள்ள சேதுசீமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உளுந்து சாகுபடி தொழில் நுட்பம், இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தின் நிலை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலை தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்து எல் நினோ பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். அப்போது உளுந்து சாகுபடியில் தொழில் நுட்பங்கள் குறித்தும், பூச்சி கட்டுப்பாடு முறைகள் குறித்தும் இணை பேராசிரியர்கள் ஜெகதீசன், விஜயராகவன் விளக்கினர்.பின் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு உளுந்து உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கினர். கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் நித்யா நன்றி கூறினார். ––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை