உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கோயில் கும்பாபிஷேகம்

 கோயில் கும்பாபிஷேகம்

கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் ராஜ காளியம்மன், சக்தி கணபதி, பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. பிறகு காலை 9.30 மணிக்கு மேல் சிவாச்சாரியார் கேசவன் குருக்கள் முன்னிலையில் கோபுர கலசத்திற்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது. பின் ராஜ காளியம்மன், சக்தி கணபதி பாலசுப்பிரமணியர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் செங்கப்படை, கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை