உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்கச்சிமடம் மீனவத் தொழிலாளர்கள்  ஆட்டோ பெர்மிட் வழங்க  வலியுறுத்தல்

தங்கச்சிமடம் மீனவத் தொழிலாளர்கள்  ஆட்டோ பெர்மிட் வழங்க  வலியுறுத்தல்

ராமநாதபுரம்: மீனவர்களுக்கு புனர்வாழ்வு திட்டத்தில் தங்கச்சிமடம் மீனவர்களுக்கு ஆட்டோ பெர்மிட் வழங்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தங்கச்சிமடம் மீனவன் நண்பன் ஆட்டோ சங்கத் தலைவர் டொமினிக் தலைமையில் டிரைவர்கள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில் தங்கச்சிமடம் பகுதியில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மாற்றுத் தொழில் வேண்டி ஆட்டோ ஒட்டி வருகின்றனர்.இவர்கள் தங்கச்சிமடம் பாம்பனில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை தங்கள் ஆட்டோவில் ராமேஸ்வரத்திற்கு ஏற்றி, இறக்கி விடும் போது ராமேஸ்வரம் போலீசார் தடுத்து அபராதம் விதிக்கின்றனர். இதை தவிர்க்க இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டும் மீனவர்களுக்கு புனர்வாழ்வு திட்டத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்கச்சிமடம் டிரைவர்களுக்கு ஆட்டோ பெர்மிட் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை