உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பஸ் கண்ணாடி உடைந்தது

 பஸ் கண்ணாடி உடைந்தது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்னை செல்வதற்காக நேற்று தனியார் பஸ் வந்தது. முதுகுளத்துார் சார் பதிவாளர் அலுவலகம் அருகே தனியார் பஸ் மீது எதிரில் வந்த லாரி உரசியதில் பஸ் கண்ணாடி உடைந்தது. பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. இதனால் 15 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவ்வழியே வாகனங்கள் செல்வதற்கு சிரமப்பட்டன. சார்பதிவாளர் அலுவலகம் அருகே ரோடு குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !