மகா சிவராத்திரி திருவிழா ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்
ராமேஸ்வரம்:மாசி மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில் தை அமாவாசை, மாசி மகா சிவராத்திரி, ஆடி திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும். மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு நேற்று கோவிலில் சுவாமி சன்னிதி முன் கொடியேற்றப்பட்டது.அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. பிப்., 24ல் கோவிலில் இருந்து முத்தங்கி சேவையில் சுவாமி, அம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா, பிப்., 26ல் மாசி மகா சிவராத்திரியில் மாசி தேரோட்டம், பிப்., 27ல் மாசி அமாவாசை அன்று கோவில் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.