உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் மணக்கும் மாசி கருவாடு அசைவ பிரியர்களின் விருப்பம்

கீழக்கரையில் மணக்கும் மாசி கருவாடு அசைவ பிரியர்களின் விருப்பம்

கீழக்கரை: கீழக்கரையில் பிரதான அசைவ உணவு வகைகளில் மாசி கருவாடு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.மாலத்தீவு மற்றும் மினிகாய் தீவுகளில் பிடிபடும் 10 முதல் 20 கிலோ எடை கொண்ட சூரை மீன்களை பிடித்து அவற்றிலிருந்து மாசி கருவாடுகள் தயாரிக்கப்படுகின்றன. பிடிபடும் சூரை மீன்கள் குறிப்பிட்ட அளவிற்கு 20 செ.மீ., நீளத்திற்கு வெட்டி எடுக்கப்படுகின்றன.குறிப்பிட்ட பாத்திரத்தில் அவித்து சிறிய வெள்ளைத் துணியால் முறுக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகின்றன. பின்னர் அவை புகையிடப்பட்டு உலர்த்தப்படுகிறது. நன்றாக உலர்ந்து கருஞ்சிவப்பு நிறம் கொண்ட மரக்கட்டைகளை போல ஆகின்றன. இவை நீண்ட காலத்துக்கு சேமித்து வைத்து சமையலுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளது. மாசி கருவாடு மொத்த விற்பனையாளர் கீழக்கரையைச் சேர்ந்த கலீல் ரகுமான் கூறியதாவது:கீழக்கரை உணவு வகையில் மாசி கருவாட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பழைய சோறு மற்றும் சப்பாத்தி, இட்லி உள்ளிட்ட அனைத்து உணவுகளுக்கும் இணை உணவாக மாசி கருவாடு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவற்றை முறையாக பொரித்து பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. விறகு கட்டை போன்று காணப்படும் மாசி கருவாடு கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு உரிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு இங்குள்ள மக்களால் அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.மாசி கருவாட்டின் சுவையை உணர்ந்தவர்கள் அவற்றை கேட்டு விரும்பி சுவைக்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ