உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிப்.20க்கு பிறகு பதநீர் சீசன் துவக்கம்

சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிப்.20க்கு பிறகு பதநீர் சீசன் துவக்கம்

சாயல்குடி: சாயல்குடி, மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், காவாகுளம், கடுகுச்சந்தை, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இங்கு பிப்.20க்கு பிறகு பதநீர் இறக்கும் சீசன் துவங்க உள்ளது. தொடர்ந்து மார்ச் முதல் ஜூலை வரை ஆறு மாதங்களுக்கு மிகாமல் பதநீர் உற்பத்தி இருக்கும்.பதநீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி பெருவாரியாக விற்பனைக்கு கிடைக்கும். இப்போது சீசன் இல்லாத காலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கருப்பட்டிகள் சில்லரை விலையில் கிலோ ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரத்தைச் சேர்ந்த கருப்பட்டி மொத்த வியாபாரி ஜெயபாண்டியன் கூறியதாவது:தற்போது பதநீர் சீசன் இல்லை. பிப்.,20-க்கு பிறகு பதநீர் உற்பத்தி பெருவாரியாக துவங்கும். அப்போது கருப்பட்டி விலை தற்போதைய விலையைக் காட்டிலும் குறைவாகவே விற்பனை செய்யப்படும். 10 கிலோ கொண்ட கருப்பட்டி ஓலைப்பட்டி ரூ.3200 வரை விற்பனை செய்யப்படுகிறது.சீசன் காலங்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது. கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், கலப்பட கருப்பட்டியால் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும். துாய்மையான பதநீரில் காய்ச்சப்படும் கருப்பட்டிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.ரேஷன் கடைகளில் பண்டிகை காலங்களில் வெல்லம், சர்க்கரை கொடுப்பதை போன்று கருப்பட்டியை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும். பனை மரங்கள் பல இடங்களில் வெட்டி அழிக்கப்படுகிறது.அவற்றை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனைமர தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை