உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  புதிதாக போர்வெல் அமைத்தும் பயன்படுத்த முடியாத அவலம்

 புதிதாக போர்வெல் அமைத்தும் பயன்படுத்த முடியாத அவலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அமைக்கப்பட்ட போர்வெல் தண்ணீர் கலங்கலாக வருவதால் பயன்படுத்த முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் போர்வெல் அமைத்து ஊராட்சி சார்பில் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கிராமத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதத்திற்கு முன் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டது. அதில் வரும் தண்ணீர் கலங்கலாகவே வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி யுள்ளது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது: வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் பல ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் திறந்து விடப் படுகிறது.போர்வெல் அடிக்கடி பழுதடைந்து வந்தது. சில மாதத்திற்கு முன்பு அங்கன்வாடி மையம் அருகே புதிய போர்வெல் அமைக்கப்பட்டது. அதிலிருந்து வரும் தண்ணீர் கலங்கலாக வருவதால் அந்த தண்ணீரையும் பயன்படுத்த முடியவில்லை. அவ்வப்போது பழுது ஏற்படும் பழைய போர்வெல்லை சரி செய்து தண்ணீர் பயன்படுத்தப் படுகிறது. இதனால் உவர்ப்பு அதிகமாக உள்ள தண்ணீரை பயன்படுத்தும் சூழல் தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிதாக போர்வல் அமைத்து சுத்தமான தண்ணீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை