உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரிச்சான்குண்டில் கருமை படிந்த குடிநீரால் பொதுமக்கள் அவதி; பல மாதங்களாக அவல நிலை

கரிச்சான்குண்டில் கருமை படிந்த குடிநீரால் பொதுமக்கள் அவதி; பல மாதங்களாக அவல நிலை

பெரியபட்டினம்: பெரியபட்டினம் ஊராட்சி கரிச்சான்குண்டு கிராமத்தில் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் வழங்கப்படும் குடிநீரால் கிராம மக்கள் அவதியடைகின்றனர். இதுகுறித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கரிச்சான்குண்டு கிராம மக்கள் தங்களது குறைகளை முறையிட்டு சரி செய்யுமாறு தெரிவித்தனர்.கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூ., திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் கரிச்சான்குண்டு கிராம தலைவர் அம்மாசி ஆகியோர் கூறியதாவது:கிராமத்தில் 50 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கரிச்சான்குண்டு பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பல ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் தேவைக்காக டேங்கரில் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.பல மாதங்களாக குடிநீரில் பாசி படர்ந்தும் கருமையான துகள்கள் மிதந்த நிலையிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. பெரியபட்டினத்தில் உள்ள உள்ளூர் கிணற்றில் இருந்து சப்ளை செய்யப்பட்டு மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றப்பட்டு தெரு குழாய்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.இந் நிலையில், சுகாதாரமற்ற குடிநீரால் மக்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்படுகிறது என்றார்.எனவே திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்படும் குடிநீருக்கு மாற்று ஏற்பாடாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக துாய்மை செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ