உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திராவிட கட்சிகளுக்கிடையே தான் வரும் சட்டசபை தேர்தலில் போட்டி தமிமுன் அன்சாரி பேட்டி

 திராவிட கட்சிகளுக்கிடையே தான் வரும் சட்டசபை தேர்தலில் போட்டி தமிமுன் அன்சாரி பேட்டி

ராமநாதபுரம்: தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கிடையே தான் போட்டி இருக்கும் என மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. தொகுதி பங்கீடு குறித்து பொங்கலுக்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளிடையே மட்டும் தான் போட்டி இருக்கும். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உள்ளூர் மக்கள் எவ்வித பாகுபாடுமின்றி பழகி வருகின்றனர். அதை ஒரு போதும் அயோத்தி ஆக்க முடியாது. த.வெ.க., தலைவர் விஜய் வந்த பிறகு தான் தமிழகத்தில் எத்தனை பேர் அரசியல் தெரியாமல் இருக்கின்றனர் என தெரிய வந்தது. அவர்களை அரசியல்படுத்த வேண்டும். பிற கட்சிகளில் உள்ள ஆதரவற்றோர் மட்டும் தான் விஜய் கட்சிக்கு செல்கின்றனர். வட மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !