நாடக நடிகர்கள் சங்க கூட்டம்
கமுதி: -கமுதியில் முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்க ஆலோசனை கூட்டம்,புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. நாடக ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கிராமிய பாடகர் முத்திருளாண்டி முன்னிலை வகித்தார். மறைந்த சங்கத் தலைவர் கோடையிடி குற்றாலம் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தனர். புதிய சங்கத்தின் தலைவராக ஆனந்தன் குற்றாலம், செயலாளராக இளந்தமிழரசன், துணைத்தலைவர் நாடக ஆசிரியர் சந்திரசேகரன், துணைச் செயலாளர் கிராமிய பாடகர் முத்திருளாண்டி, பொருளாளர் நாடக ஆசிரியர் கடற்கரையான் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.