உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சிக்கல் : சிக்கல் அருகே தனிச்சயம் - இத்துாருணி செல்லும் வழியில் உள்ள ஆற்றோடை பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.தனிச்சயம் ஊராட்சி இத்துாருணி செல்லும் வழியில் 2015ல் ஆற்றோடை செல்லும் வழியில் 60 மீ., தொலைவிற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் தடுப்புச் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளதால் ஏராளமானோர் தவறி பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர்.இத்துாருணியை மக்கள் கூறியதாவது: சேதமடைந்த பாலத்தால் விபத்து அச்சத்தில் உள்ளோம். இதன் அருகே இரண்டு தடுப்பணைகள் கட்டப் பட்டுள்ளன.அவை எவ்வித பயன்பாடின்றி சேதம் அடைந்துள்ளது. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.எனவே சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதி பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி