உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிபோதையில் வாகனம் ஓட்டினால் தப்பிக்கவே முடியாது: எஸ்.பி., சந்தீஷ்

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் தப்பிக்கவே முடியாது: எஸ்.பி., சந்தீஷ்

ராமநாதபுரம் : குடி போதையில் வாகனம் ஓட்டினால் இனி தப்பிக்கவே முடியாது, என எஸ்.பி., சந்தீஷ் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பல்வேறு உபகரணங்களை எஸ்.பி., சந்தீஷ் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ராமநாதபுரம் போலீசுக்கு 2022--23ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட நிதியில் ரூ.5 லட்சம் செலவிடாமல் இருந்தது. அந்த நிதியை கலெக்டரிடம் கேட்டு வாங்கி போக்குவரத்து பாதுகாப்பிற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து போலீசாருக்கான ரெயின் கோட், ரிப்லெக்ட் லைட், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான பூட்டு, மது அருந்துவோரை கண்டறியும் கருவி, சாலையோர தடுப்பான்கள் உள்ளிட்டவை தேவைப்படும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்படும். மேற்கொண்டு சோலாரில் இயங்கும் வேக கணிப்பான் விரைவில் வழங்கப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் மாற்றியமைக்கும் வகையில் போர்டபல் சிக்னல் வாங்கப்பட்டுள்ளது.மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தலா 3 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் போலீசார் சோதனை செய்யும் இடம், சோதனை செய்யும் நபரின் புகைப்படம், வண்டி எண், பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவாகி விடும். இதனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் ஏமாற்ற முடியாது. ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. தமிழகத்தில் குறைவான போக்குவரத்து விபத்து நடப்பதில் ராமநாதபுரம் 3-வது இடத்தில் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை