உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமம்

பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமம்

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் பஸ் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர், விருதுநகர், திருச்செந்துார், திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது. முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ்சில் பயணம் செய்கின்றனர். பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் கால அட்டவணை எழுதப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஏராளமான பஸ்கள் நேரம் மாற்றம் மற்றும் புதிதாக பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. பழைய கால அட்டவணை சரியாக இல்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் வெளியூர் பயணிகள் அங்குள்ள கடைகளில் பஸ் குறித்த நேரம் கேட்டு அறிந்து பயணிக்கும் அவலநிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் கடைக்காரர்கள் முகம் சுளிக்கும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் பஸ் குறித்த நேரம் தெரியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தற்போது புதிதாக பஸ் கால அட்டவணை அமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ