உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி கோவில் ஸ்தானிகர் ஜாமின் தள்ளுபடி

திருப்புல்லாணி கோவில் ஸ்தானிகர் ஜாமின் தள்ளுபடி

ராமநாதபுரம்,: -ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி நகைகள் மாயமான வழக்கில் நகை பொறுப்பாளரான ஸ்தானிகர் சீனிவாசன் ஜாமின் மனுவை, மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில், சுவாமி, பத்மாஸனித்தாயார் அலங்காரத்திற்கான தங்க நகைகள், ஆபரணங்கள் பாதுகாப்பு அறையில் இருந்தன. இந்த நகைகளில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமாயின.திவான் பழனிவேல் பாண்டியன் புகாரின்படி, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளரான கோவில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர், ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2ல் நவ., 2ல் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மெகபூப் அலிகான் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை