உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்

திருவாடானை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி கண்மாய்களையும் துார்வார தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் பேசப்பட்டது. திருவாடானை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முகமதுமுக்தார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ஆரோக்கிய மேரிசாராள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.தலைவர் முகமதுமுக்தார்: சத்துணவுப் பணியாளர்கள் பற்றாக்குறையால் மதிய உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் கண்மாய்களை துார்வார நான்கு ஊராட்சிகளில் 17 கண்மாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் ஒரு ஊராட்சிக்கு இரு கண்மாய்கள் என தேர்ந்தெடுத்து துார்வார தொண்டு நிறுவனங்கள்முன் வரவேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு சில உரிமைகளை மாவட்ட நிர்வாகம் விட்டுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் பணிகள் நன்றாக நடக்கும் என்றார். மேலாளர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ