உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் வழியில் முள் மரங்கள்

கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் வழியில் முள் மரங்கள்

கீழக்கரை: கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி முனீஸ்வரம் பகுதியில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் வழியில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கீழக்கரையில் 2016 முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படுகிறது. கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் இருந்து வரக்கூடிய பத்திரம் பதியக்கூடிய பொதுமக்கள் முனீஸ்வரத்தில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரு கின்றனர். இந்நிலையில் சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: முனீஸ்வரத்தில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் கான்கிரீட் சாலையின் இரு புறங் களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. எனவே தில்லையேந்தல் ஊராட்சி தனி அலுவலர் இடையூறு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை