உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடியில் ஊடுருவிய மூவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்

தனுஷ்கோடியில் ஊடுருவிய மூவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்

ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில் கள்ளத்தனமாக படகில் ஊடுருவிய இலங்கை குற்றவாளிகள் 3 பேர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.இலங்கை முல்லைத்தீவை சேர்ந்த கபிலன் 34, கொழும்பு அருகே கொச்சிகடையை சேர்ந்த மதிவிளகே 33, சுமித்ரோலன் பெர்னாண்டோ 43. மூவரும் இலங்கை மன்னாரில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு ஜூன் 28ல் தனுஷ்கோடி அருகே கடலில் உள்ள 4ம் மணல் தீடையில் வந்திறங்கினர்.இவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கையில் போதை பொருள் கடத்தல் வழக்கு, மக்களிடம் பல லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளி வந்தவர்கள் என தெரிய வந்தது.இந்த வழக்குகளில் சிறை தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் மூவரும் இலங்கையில் இருந்து தப்பித்து தனுஷ்கோடியில் ஊடுருவியது தெரிந்தது. பின் மூவரும் மண்டபம் மரைன் போலீசார் காவலில் இருந்தனர்.இந்நிலையில் இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மூவரையும் கொழும்பு செல்லும் விமானத்தில் அதிகாரிகள் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ