திருப்புல்லாணியில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் பணி
திருப்புல்லாணி: - திருப்புல்லாணியில் பக்தர்களின் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் பல்வேறு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பக்தர்களின் வசதிக்காக வரிசையில் நிற்பதற்கான நிழற்பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.