தரைப்பாலங்களில் போக்குவரத்து துண்டிப்பு
தொண்டி : மழையால் தரைப்பாலங்களில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஓரியூர்- திருப்புனவாசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.திருவாடானை, தொண்டி பகுதியில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. திருவாடானை- வெள்ளையபுரம் ரோட்டில் நகரிகாத்தான் தரைபாலத்தில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. வரும் நாட்களில் தொடர் மழை பெய்தால் போக்குவரத்து நிறுத்தப்படும்.ஓரியூர்- திருப்புனவாசல் தரைப்பாலத்தை பெரிய பாலமாக அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. கடந்த அக்.,ல் பெய்த மழையால் பாலத்தில் தண்ணீர் சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே போல் தற்போது பெய்த மழையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தொண்டியில் தெற்கு தோப்பு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மக்கள் நடந்து செல்லமுடியாத வகையில் சிரமம் அடைந்துள்ளனர். பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.