மேலும் செய்திகள்
ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
15-Oct-2024
கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா சிக்கியது
07-Oct-2024
ராமநாதபுரம், : இலங்கை, புத்தளம் மாவட்டம், தம்பபண்ணி கடற்படையினருக்கு, பீடி இலைகள் லாரியில் கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின்படி, புத்தளம் பாலாவி பகுதியில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது, அங்கு வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற போது, அதை, நிறுத்திவிட்டு இருவர் தப்பினர்.லாரியை சோதனையிட்ட போது, 60 மூட்டைகளில், 1,535 கிலோ பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலை பண்டல்களையும், லாரியையும் பறிமுதல் செய்து, புத்தளம் கலால் வரித்துறையிடம் ஒப்படைத்தனர். அவை, சட்டவிரோதமாக தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு, லாரிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
15-Oct-2024
07-Oct-2024