உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருளில் மூழ்கி வரும் மக்கள் அமைச்சர் தொகுதியில் அவலம்

இருளில் மூழ்கி வரும் மக்கள் அமைச்சர் தொகுதியில் அவலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் ஒத்த வீடு பகுதியில் ஆறு மாதத்திற்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு தளவாட பொருட்கள் இறக்கியும் இதுவரை எந்த பணியும் நடக்காததால் குறைவழுத்த மின்சாரத்தால் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் மக்கள் இருளில் அவதிப்படுகின்றனர்.கீழச்சாக்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. ஒத்த வீடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக குறைவழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை தொடர்கிறது. ஆறு மாதத்திற்கு டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு மின்கம்பம் உள்ளிட்ட தளவாட பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.தற்போது வரை எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் தினந்தோறும் ஒத்தவீடு பகுதியில் மக்கள் குறைவழுத்த மின்சாரத்தால் இருளில் தவிக்கும் அவலநிலை உள்ளது. எலக்ட்ரிக் பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அமைச்சர் தொகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு ஆறு மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தொடர்வதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை