வாலிபருக்கு வெட்டு இருவர் கைது
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் 35, அதே பகுதியைச் சேர்ந்த ராஜகுரு 35, இருவரும் நண்பர்கள். சமீபத்தில் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பினர். ரெகுநாதபுரம் மேலுார் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு இருவரும் ரோட்டில் நடந்து சென்ற போது டாஸ்மாக் கடையில் இருந்து மது போதையில் வந்த இருவர் முனீஸ்வரனிடம் அலைபேசியை கேட்டு தகராறு செய்தனர். அவர் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த அவரது நண்பர் ராஜகுருவையும் அரிவாளால் தாக்கி காயப்படுத்தினார்.முனீஸ்வரனை அப்பகுதி மக்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அரிவாளால் வெட்டிய வாலாந்தரவையை சேர்ந்த கார்மேகம் 27, சூர்யா 26, ஆகியோரை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.