உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் போதை பவுடர் வைத்திருந்த இருவர் கைது டூவீலர், அலைபேசி, பணம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் போதை பவுடர் வைத்திருந்த இருவர் கைது டூவீலர், அலைபேசி, பணம் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மெத் ஆம்பெட்டமைன் போதை பவுடர் 13 கிராமை கைப்பற்றி, இரு டூவீலர்கள், அலைபேசி, ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்து, இருவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் கேணிக்கரை தங்க ஈஸ்வரன் எஸ்.ஐ.,க்கு கிடைத்த தகவலின் படி சக்கரக்கோட்டை அப்துல்கலாம் நகர் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் சந்தேகப்படும்படி இருவர் நின்றிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்ற அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்களை சோதனையிட்ட போது மெத் ஆம்பெட்டமைன் 13 கிராம் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இரு டூவீலர்கள், அலைபேசி, 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ராமநாதபுரம் சிவஞானபுரம் ரோடு மகாசக்தி நகர் 6 வது தெரு அப்துல்மஜூத் மகன் ஹமீது முகமது 21, காட்டூருணி தங்கப்பாபுரம் வைகை நகரை சேர்ந்த முகமது மரைக்காயர் மகன் ஹபீப் முகமது 22, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை