உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி, கடலாடி ஒன்றியத்தில் பராமரிப்பின்றி சமுதாய கழிப்பறைகள் அரசு நிதி வீணடிப்பு

திருப்புல்லாணி, கடலாடி ஒன்றியத்தில் பராமரிப்பின்றி சமுதாய கழிப்பறைகள் அரசு நிதி வீணடிப்பு

கடலாடி : கடலாடி, திருப்புல்லாணி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பறைகள் பராமரிக்கப்படாததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.ஊராட்சிகளில் 2011ல் கட்டப்பட்ட சமுதாய கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிராமங்களில் திறந்த வெளிழை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும் பொது சுகாதாரத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கிராமங்கள் தோறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியாக பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் மின் இணைப்பு இல்லாமலும், தண்ணீர் நிரப்பப்படாமலும் உரிய முறையில் பராமரிப்பின்றி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. 2021 க்கு பிறகு அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து பயன்பாடற்ற கழிப்பறை வளாகங்களில் பராமரிப்பு பணி மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் காட்சி பொருளாக உள்ள கழிப்பறை வளாகங்களால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள பொது சுகாதார வளாகங்களை ஆய்வு செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தண்ணீர் வசதி மற்றும் மின் வசதியுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமங்களுக்கு வரக்கூடிய வெளியூர் பொதுமக்களுக்கு இம்மாதிரியான பொது சுகாதார கழிப்பிடங்கள் பயனுள்ளதாக அமைகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நிதி வீணடிப்பை தவிர்க்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !