உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடியில் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தல்

திருப்பாலைக்குடியில் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: திருப்பாலைக்குடி ஊராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.திருப்பாலைக்குடியை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் பேரவை இளைஞர் அணி மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமையில் ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடியில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்.இங்கு விளையாட மைதானம் இல்லாததால் வெளியூர்களுக்கு சென்று விளையாட சிரமப்படுகின்றனர்.சில இளைஞர்கள் திசைமாறி சூதாட்டம், மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இளைஞர்களின் நலன் கருதி திருப்பாலைக்குடியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை