உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மெக்கானிக் பணியிடம் நிரப்ப வலியுறுத்தல்

மெக்கானிக் பணியிடம் நிரப்ப வலியுறுத்தல்

பரமக்குடி: பரமக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., காரைக்குடி மண்டல கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஜயசுந்தரம், துணைச் செயலாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் மணவழகன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ராஜன் பேசினர். ஓய்வு பெற்றும் 16 மாதங்கள் பணப்பலன் பெறாத தொழிலாளர்களுக்கு உடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு பணம் செலுத்தியும் தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உள்ளனர். காரைக்குடி மண்டலத்தில் மெக்கானிக் பற்றாக்குறையை சீர் செய்து பஸ்கள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை