உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வல்லபை ஐயப்பன் கோயில் சுமங்கலி பூஜை

வல்லபை ஐயப்பன் கோயில் சுமங்கலி பூஜை

ரெகுநாதபுரம்,- ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழாவையொட்டி சுமங்கலி பூஜை நடந்தது.விழாவில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடக்கிறது. நேற்று மாலை 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. வல்லபை ஐயப்பன் கோயில் அலங்கார கொலு மண்டபத்தில் பஜனை, நாமாவளி நடந்தது. சுமங்கலி பூஜையை கோயில் தலைமை குருசாமி மோகன் செய்தார்.ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு விளக்குகள், ஜாக்கெட் துணி, வளையல் உள்ளிட்ட தாம்பூல பிரசாதங்கள் வழங்கப்பட்டது.மூலவர் வல்லபை மஞ்சமாதாவிற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !