உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செல்வ விநாயகர் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கும்பாபிஷேகம்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தை கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைக்கு பின் நேற்று காலை 10:30 மணிக்கு செல்வ விநாயகர் கோயில் கோபுர விமான கலசத்தில் உத்தரகோசமங்கை முத்துக்குமார குருக்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கீழச்சீத்தை தேவேந்திரகுல வேளாளர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ