காவிரி குடிநீர் வராமல் கிராம மக்கள் அவதி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமப்படுகின்றனர்கீழச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராமத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக முறையாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.வேறு வழியின்றி முதுகுளத்துார் -சாயல்குடி ரோடு கீழச்சாக்குளம் முக்கு ரோட்டில் காவிரி குடிநீர் செல்லும் மெயின் குழாயில் கசியும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.இதனால் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிராமத்திற்கு காவிரி குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.