உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுாறு நாள் வேலை வழங்க கிராம மக்கள் வலியுறுத்தல்

நுாறு நாள் வேலை வழங்க கிராம மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த கோவிந்தமங்கலம் கிராம மக்கள் நுாறு நாள் பணி வழங்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.கோவிந்தமங்கலம் கிராம மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நுாறு நாள் வேலை வழங்கவில்லை.இதனால் மிகவும் சிரமப்படுகிறோம். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் முறையாக பதிலளிக்கவில்லை. எனவே கூலி வேலை பார்த்து சிரமப்படும் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நுாறு நாள் வேலை உடனடியாக வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என கிராம மக்கள் மனுவில் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ