மேலும் செய்திகள்
சித்ரா பவுர்ணமி உற்ஸவம்
14-May-2025
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் பாலமுருகன் கோயில் வைகாசி விசாக விழா மே 31ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.மூலவர் விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு பக்தர்களுக்கு பனை ஓலை பட்டையில் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஜூன் 7ல் பொதுக்காவடி எடுத்து ஊர் சுற்றுதல் நிகழ்ச்சியும், மறுநாள் ஜூன் 9ல் காலை 8:00 மணிக்கு முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து வந்து பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்க உள்ளது.விழா ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
14-May-2025