உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாலையில் கொட்டப்படும் கழிவு நீர்: மக்கள் பாதிப்பு

சாலையில் கொட்டப்படும் கழிவு நீர்: மக்கள் பாதிப்பு

சாயல்குடி : சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட நகர் பகுதிகளில் டீக்கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரை நடுரோட்டில் கொட்டுவதால் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்தும் முதுகுளத்துார், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாயல்குடி மார்க்கமாக திருச்செந்துார் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் டீக்கடையில் உள்ள கழிவு நீரை தார் சாலையில் நடுரோட்டில் ஊற்றுவதால் பாதயாத்திரை பக்தர்கள் வெறும் காலுடன் நடக்கும் போது சிரமத்தை சந்திக்கின்றனர்.இதனால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே இது குறித்த அறிவுறுத்தல்களை பேரூராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை