உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி அருகே நீர்த்தேக்க தொட்டி நிரம்பி வீணாகும் நீர்

தொண்டி அருகே நீர்த்தேக்க தொட்டி நிரம்பி வீணாகும் நீர்

தொண்டி: தொண்டி அருகே டி.புதுக்குடி நீர்த்தேக்க தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாக வயல்களில் ஓடுவதால் கிராம மக்கள் அதிருப்தியடைந்தனர். தொண்டி பேரூராட்சிக்கு கோவினி, ஆட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் காவிரி நீரும் சப்ளை ஆகிறது. குழாய் வழியாக வரும் நீரை ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றபட்டுகிராமங்களுக்கு குடிநீர் சப்ளை ஆகிறது.டி.புதுக்குடியில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றபடும் நீர் நிரம்பி வயல்வெளிகளில் வீணாகிறது. இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த நடராஜன் கூறியதாவது:டி.புதுக்குடி மற்றும் புடனவயல் கிராமங்களுக்கு இந்த நீர்த்தேக்க தொட்டி மூலம் நீர் சப்ளை செய்யப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இப்பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. நீர்த்தேக்கதொட்டி நிரம்பி நீர் வீணாகிறது.குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தண்ணீர் வீணாவது கவலையாக உள்ளது. பேரூராட்சி அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை