பரமக்குடி வண்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
பரமக்குடி: பரமக்குடி வண்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலையில் ஸ்ரீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை வெள்ளிக்கிழமை நாளில் விஷ்வக்சேன ஆராதனம், ரக்சாபந்தனம் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நலுங்கு, சாற்று முறை நிறைவடைந்து பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன.மாலை பெருமாள் பட்டுப் பல்லக்கில் வீதி உலா வந்தார். விழாக் குழுவினர், டிரஸ்டிகள் கலந்து கொண்டனர்.