உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடியரசு தினத்தையொட்டி புதிய பாம்பன் பாலம் திறப்பா

குடியரசு தினத்தையொட்டி புதிய பாம்பன் பாலம் திறப்பா

குடியரசு தினத்தையொட்டி புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் ஸ்டேஷன்களுக்கிடையே கடலில் புதிய துாக்கு பாலம் ரூ.580 கோடி செலவில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2.08 கி.மீ., நீளம் கொண்ட இப்பாலம், பழைய பாலத்தைவிட 3 மீ., உயரமானதாகவும், நாட்டிலேயே முதன்முறையாக கப்பல் போக்குவரத்திற்கு என செங்குத்தாக மேலே எழும்பி செல்லும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.நவ.,26ல் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி ஆய்வு செய்து பாலத்தில் 75 கி.மீ., வேகத்தில் பயணிகள், சரக்கு ரயில்களை இயக்க ஒப்புதல் வழங்கினார். அப்போது சில குறைகளை சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர் ஆய்வு மேற்கொண்iடார். ரூ.95 கோடி செலவில் ராமேஸ்வரம் ஸ்டேஷன் புதுப்பிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 316 இருக்கைகள் கொண்ட முனையங்கள், உணவகங்கள், கடைகள், பொருட்கள் வைக்கும் அறை, 72 படுக்கைகள் கொண்ட டார்மிட்டரி, பயணிகள்காத்திருப்பு அறை, குளிர்சாதன காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் ஜன.,26ல் டில்லி - பாரமுல்லா இடையே ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க இருப்பதாகவும், அதையொட்டி புதிய பாம்பன் பாலமும் திறக்கப்படலாம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !