உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உயரழுத்த மின்கம்பம் அருகே கட்டப்படும் பிளக்ஸ் பேனர்கள் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்

உயரழுத்த மின்கம்பம் அருகே கட்டப்படும் பிளக்ஸ் பேனர்கள் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்

சாயல்குடி : கோயில் விழாக்கள், அரசியல் கட்சியினரின் விளம்பரம், திருமண வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை காட்சிப்படுத்த விளம்பர பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் அதிகளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உயர் அழுத்த மின்கம்பம் அருகே கட்டப்படும் பிளக்ஸ் பேனர்களால் விபத்து அபாயம் தொடர்கிறது. சாயல்குடி, கடலாடி, சிக்கல், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு போக்குவரத்திற்கு இடையூறாகவும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது. அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் வரிசையாக நடும் போது உயரழுத்த மின்கம்பத்தின் அருகே இரும்பு கம்பியை ஊன்றும் செயல் தொடர்ந்து அரங்கேறுகிறது. இதனால் விபத்து அபாயம் நீடிக்கிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது:உயரழுத்த மின்கம்பி செல்லும் வழியில் கொடிக் கம்பங்கள் நடுவதும் அதன் அருகே பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவைகளை வைப்பதும் போக்குவரத்திற்கு இடையூறாக செயல்படுவதால் தொடர்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரியத்தினர் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை