உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழிப்பறி வழக்கில் பெண்ணிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

வழிப்பறி வழக்கில் பெண்ணிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ரோட்டில் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணி டம் நகையை பறித்த பெண்ணிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சாயல்குடி வி.வி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கஸ்துாரி. தரைக்குடி ரோட்டில் பெட்டி கடை வைத்திருந்தார். 2021 ஆக.,ல் கடையை அடைத்து விட்டு தனது குழந்தையுடன் கஸ்துாரி மாடாசாமி கோயில் அருகே நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இருதய ஜெனிபர் 45, அங்கு வந்த கஸ்துாரியின் இரண்டரை பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினார். அவரை சாயல்குடி போலீசார் கைதுசெய்தனர். இவ்வழக்கு விசாரணை கடலாடி குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. ஜூலை 30ல் இரு தரப்பு வாதங்கள் முடிந்து இருதய ஜெனிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து நீதிபதி சிவசுப்பிர மணியன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை