உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக எய்ட்ஸ் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக எய்ட்ஸ் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம், : ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து ரங்கோலியை கலெக்டர் பார்வையிட்டார். அலுவலர்கள், பணியாளர்கள் முன்னிலையில் உலக எய்ட்ஸ் தினம் -2024 க்கான உறுதிமொழி எடுத்தனர்.சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அனைவரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் முருகேசன், மாவட்ட எய்ட்ஸ் கூட்டமைப்பு விரிவாக்க கல்வியாளர் முனீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை