மேலும் செய்திகள்
'பிரச்னைகளுக்கு தீர்வு தற்கொலை கிடையாது'
11-Sep-2025
ராமேஸ்வரம்: உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி ராமேஸ்வரம அருகே கல்லுாரி மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்பு பாம்பனில் உள்ள அன்னை கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தற்கொலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மனநல ஆலோசகர் கலைவாணி மாணவிகளிடம் விழிப்புணர்வு உரை யாற்றினார். முதல்வர் சோபி, ராமேஸ்வரம் தீவு சமூக அலுவலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், நிர்வாகிகள் சுகந்தி, கங்காஜாகிர், தில்லை புஷ்பம், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Sep-2025