உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர்  பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர்  பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்: மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ்செயல்படும் உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் தற்காலிக மாக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் மாதத் தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்கள், பள்ளி அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இடைநிலை ஆசிரியர் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (தாள் - - 2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு ஜூன் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை