உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை

ராமேஸ்வரத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கெந்த மாதன பர்வதம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி முனீஸ்வரி 24. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த முனீஸ்வரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக முனீஸ்வரியின் உறவினர்கள் புகார் செய்ததால் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஹபீப் ரகுமான் ராமேஸ்வரம் வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். பின் உடல் ராமநாத புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராமேஸ்வரம் டவுன் போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை