உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

 செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்: ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தாட்கோ மூலம் இலவசமாக செயற்கை நுண்ணறிவு பயிற்சிப்பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறு தொடக்கம் - செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தைசார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இப்பயிற்சியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.comஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 2 மாதங்கள் ஆகும். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை