மேலும் செய்திகள்
இன்று இனிதாக (22.08.2024) திருவள்ளூர்
22-Aug-2024
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், திருமாதலம்பாக்கத்தில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட திரிபுரசுந்தரி உடனுறை திருமாலீஸ்வரர் கோவில் உள்ளது. திருமால், சிவபெருமானுக்கு பூஜை செய்த ஸ்தலமான இக்கோவிலில் பொன்னிறம் கொண்ட லிங்க திருமேனியாய் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இக்கோவிலை பழமை மாறாமல் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று, மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை துவங்கியது.நாளை, காலை 6:00 மணிக்கு திரிபுரசுந்தரி சமேத திருமாலீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்நது காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும், கொடியேற்றமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
22-Aug-2024