மேலும் செய்திகள்
மதுக்கூடமாக மாறிய நெற்களம்
16-Dec-2024
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம் கணபதிபுரம் கிராமத்தில், 2,006ம் ஆண்டு நெற்களம் அமைக்கப்பட்டது. இந்த நெற்களத்தின் வாயிலாக, கணபதிபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராம விவசாயிகள் நெற்கதிர்கள் அறுவடை செய்து, நெல் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் தரம்பிரித்து வந்தனர்.நெல் அறுவடை இயந்திரங்களின் வருகைக்கு பின், அறுவடை செய்யும் நெல்லை, இந்த நெற்களத்தில் கொட்டி வந்தனர். தற்போது, இந்த நெற்களம் சிமென்ட் சேதம் ஏற்பட்டு, மண்ணாக காட்சி அளிக்கிறது. மேலும், மழைக்காலத்தில் இந்த நெற்களத்தில் மீது, தண்ணீர் பெருக்ககெடுத்து ஓடுகிறது.இதனால், விவசாயிகள் நெற்களத்தில் நெல்லை கொட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதுதவிர, நெற்களத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் சிலர் கட்டுமானப்பொருட்களை கொட்டி ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே, புதிய நெற்களத்தை கட்டிக்கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Dec-2024